அருகில் உள்ள கோவில் நிர்வாகிகளை பள்ளிவாசலுக்கு அழைத்து விருந்து உபசரித்த இஸ்லாமியர்கள்
கோவை துடியலூர் பகுதியில் பழமை வாய்ந்த ஹிதாயத்துல் முஸ்லிமீன் சுன்னத் ஜமாதின் பள்ளிவாசல் அமைந்துள்ளது..
வரலாற்று சிறப்பு மிக்க பெருமைகளை கொண்ட இந்த பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியில் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் பலர் வசித்து வருவதால் ஒவ்வொரு ஆண்டு நடைபெறும் கோவில் விழாக்களில் இஸ்லாமியர்களும், ,அதே போல இஸ்லாமியர்களின் நிகழ்ச்சிகளில் இந்துக்களும் வாடிக்கையாக கலந்து கொள்கின்றனர்…
இந்நிலையில் இந்த ஆண்டு ஹிதாயத்துல் முஸ்லிமீன் சுன்னத் ஜமாதின் சார்பாக மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி பள்ளி வாசல் வளாகத்தில் நடைபெற்றது..இதில் துடியலூர் பள்ளிவாசல் துணைத் தலைவர் B.ஷேக் பாவா முன்னிலையில் நடைபெற்ற இதில், செயலாளர் M.அமீர் அப்பாஸ் வரவேற்புரை ஆற்றினார்..
பள்ளியின் தலைமை இமாம் மௌலானா மௌலவி கமாலுதீன் அல்தாபி கிராத் ஓதி இப்தார் நிகழ்வை துவக்கி வைத்தார் இதில் வேற்றுமைகளை கலைந்து இஸ்லாமியர்கள், இந்துக்கள்,மற்றும் கிறிஸ்தவ பாதிரியார்கற் என அனைவரும் ஒன்றாக அமர்ந்து நோன்பு கஞ்சி பருகி நோன்பு திறந்தனர்..
இந்நிகழ்ச்சியில், பள்ளியின் தலைவர் சுல்தான் மைதீன், பொருளாளர் சாகுல் ஹமீது மற்றும் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கற்பகம் ராஜசேகரன்,புஷ்பமணி அருண்குமார் , சித்ரா தங்கவேல் உட்பட பள்ளிவாசல் நிர்வாகிகள் , கோவில் நிர்வாகிகள் , தேவாலய நிர்வாகிகள் முன்களப் பணியாளர்கள்,பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்..