வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அண்ணா பேருந்து நிலையத்தில் சென்னைக்கு மீண்டும் அரசு விரைவு பேருந்து சேவையை எம்எல்ஏ ஸ்டாலின் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஏற்கனவே துறையிலிருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த அரசு விரைவு பேருந்து கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது.
இதனால் துறையூர் சுற்றுவட்டாரப் சென்னை செல்லும் பயணிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகினர். மீண்டும் சென்னைக்கு அரசு விரைவு பேருந்து இயக்க எம்எல்ஏ ஸ்டாலின் குமாரிடம் கோரிக்கை வைத்தனர்.பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று எம்எல்ஏ ஸ்டாலின்குமார் முயற்சியில் மீண்டும் அரசு விரைவு பேருந்து சேவையை 22/03/2025 அன்று துறையூர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்கு கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இந்த பேருந்து தினசரி இரவு 10 மணிக்கு துறையூர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு மறுநாள் விடியற்காலை 5 மணி அளவில் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சென்றடையும்.
அதே போல் தினசரி இரவு 10: 30 மணி அளவில் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு மறுநாள் விடியற்காலை 5 மணிக்கு துறையூர் அண்ணா பேருந்து நிலையம் வந்தடையும் வகையில் பேருந்துகள் இயக்கப்படுவதாக பொது மேலாளர் தெரிவித்தார்.
இதில் அரசு விரைவு போக்குவரத்து கழக பொது மேலாளர் குணசேகரன்,கோட்ட மேலாளர் சந்திரசேகர், கிளை மேலாளர் ராஜசேகர், துறையூர் அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் ஜெயசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் முன்னாள் மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன், நகர கழக செயலாளர் மெடிக்கல் ந.முரளி, ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, வீரபத்திரன் ,நகர்மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன், பொதுக்குழு உறுப்பினர் கிட்டப்பா ,நகர துணை செயலாளர்கள் இளங்கோவன், பிரபு, விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ்குமார், நகர்மன்ற உறுப்பினர்கள் வீரமணிகண்டன், அம்மன் பாபு, கார்த்திகேயன் ,இளையராஜா, பாஸ்கரன், ஜானகிராமன் மற்றும் தர்மலிங்கம் ,ரெங்கநாதபுரம் கார்த்திக், நடுவலூர் செல்வகுமார், தொமுச தலைவர் சுப்பையா, செயலாளர் மனோகரன், பொருளாளர் ராஜீ, மத்திய சங்க பொருளாளர் கருணாநிதி, வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன்,சசி, நல்லுசாமி, ஆட்டோ மணி, சந்ரு , அரசு விரைவு பேருந்து ஓட்டுனர்கள் சரவண மூர்த்தி, அன்பழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.