பொதுமக்கள் அச்சம் – திருச்சியில் கார்த்திக் சிதம்பரம் எம்பி வேதனை
திருச்சி விமானநிலையத்தில் காரைக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார் அப்போது அவர் கூறுகையில்…
தொகுதி மறுவரையறையில் தமிழக முதல்வரின் நிலைப்பாட்டை முழுமையாக வரவேற்கிறேன், மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு நடந்தால் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையும், 888 ஆக உயர்த்தினால் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும், ஆனால் வடமாநிலத்தின் பிரதிநிதித்துவம் கூடும். தென்னக மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும், 25 ஆண்டுகளின் இதே நிலை தொடர வேண்டும் என்ற முதல்வரின் கருத்து வரவேற்பு தெரிவிப்பதாக கூறினார்.
543 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையிலேயே எங்களுக்கு பேச வாய்ப்பு கிடைக்காதநிலையில் இப்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்தால், விவாதம் செய்ய முடியாது இது கூடிகளையும் ஒரு கூட்டமாகவே அமையும், பெரிய பாராளுமன்றம் அமைந்திருப்பதால் எண்ணிக்கை கூட்டினாலும், விவாதம் செய்ய இயலாது.
தொகுதி மறுவரையறை என்பது இந்தி பேசாத மாநிலங்களை பெரிதும் பாதிக்கக்கூடியது, இந்தியாவில் அரசியல் நிலைத்தன்மையை மாற்றக்கூடிய நிலை என்பதால் மற்ற மாநில முதல்வர்களை அழைத்து கூட்டம்நடத்தியுள்ளனர் என்றார்.தமிழகத்தில் பாஜகவுடன் எந்த ஒரு அரசியல் கட்சியினரும் கூட்டணி வைத்துக் கொள்ளாது, பாஜகவின் இந்தி மற்றும் இந்துத்துவா கொள்கையை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், இரண்டு மொழியை முழுமையாக படித்தபின்னர் மூன்றாவது மொழியைபற்றி பேசலாம் தமிழகமக்கள் மூன்றாவது முறையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எந்த வடமாநிலங்களில் மூன்று மொழியில் பேசுகிறார்கள் என மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிடட்டும், வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்கள் ஆறு மாதத்திலோ ஒரு வருடத்திலோ பேசும் வகையில் தமிழை கற்றுக் கொள்கிறார்கள் அதுபோல வட மாநிலத்திற்கு தமிழகத்தில் இருந்து வேலைக்கு செல்வோர் ஹிந்தி பேசுபவர்களுடன் பழக வேண்டியது நிலை ஏற்பட்டால் அவர்களும் பேசிப்பழகி கற்றுக்கொள்வார்கள், இது மொழி திணிப்பு மட்டுமல்ல ஒரு கலாச்சார திணிப்பும்தான், எந்த காலத்திலும் தமிழகம் இந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றார்.
தமிழகத்தில் நடைபெற்றுவரும் கூலிப்படை கொலைகள் தடுக்கப்பட வேண்டும், அரசு மற்றும் நுண்ணறிவு பிரிவினர், மற்றும் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுபோன்ற கொலைசம்பவங்களால் தமிழக மக்கள் அச்சமான நிலையிலேயே உள்ளனர்.குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் கோரிக்கை மத்திய அரசு அதனை பேச்சுவார்த்தை நடத்தி நிறைவேற்ற வேண்டும், மாறாக விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்றார்.
திருச்சி மாவட்ட செய்தியாளர் அருள் மோகன்