எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழியில் கிராமங்கள் வழியே மகளிர்க்காண இரண்டு விடியல் பேருந்துகள் துவக்க விழா சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் தமிழக அரசு சார்பில் புதிய விடியல் பேருந்துகள் தொடக்க விழா நடைபெற்றது.

விழாவிற்கு பொது மேலாளர் ராஜா தலைமை தாங்கினார். நகர மன்ற துணைத் தலைவர் சுப்பராயன், சீர்காழி மேற்கு ஒன்றியதிமுக செயலாளர் பிரபாகரன், துணை பொது மேலாளர் (தொழில்நுட்பம்) ராமமூர்த்தி, துணை பொது மேலாளர் (வணிகம்) ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி கிளை மேலாளர் கலந்து கொண்டனர்

மேலும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சீர்காழி முதல் வடரெங்கம் வரை செல்லும் புதிய விடியல் பேருந்துகள் மற்றும் சீர்காழியிலிருந்து செம்பதன்இருப்பு வழியாக மயிலாடுதுறை செல்லும் நகரப் பேருந்து கொடி அசைத்து தொடங்கி வைத்து பேசுகையில், இந்த இரண்டு பேருந்துகளும் அகனி, வள்ளுவக்குடி, கொண்டல், அகர எலத்தூர், வடரெங்கம், தென்னலக்குடி, அண்ணன் பெருமாள் கோவில், காத்திருப்பு, சென்பதனிருப்பு, கீழையூர், செம்பனார்கோவில் ஆகிய பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார். விழாவில் தொமுச மத்திய சங்க பொருளாளர் திருவரசமூர்த்தி, நிர்வாகிகள் அபூபக்கர் சித்திக் ,மோகன், அன்பழகன், குழந்தைவேலு, பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சீர்காழியில் கிராமங்கள் வழியே மகளிர்க்காண இரண்டு விடியல் பேருந்துகள் துவக்க விழா சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் தமிழக அரசு சார்பில் புதிய விடியல் பேருந்துகள் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு பொது மேலாளர் ராஜா தலைமை தாங்கினார். நகர மன்ற துணைத் தலைவர் சுப்பராயன், சீர்காழி மேற்கு ஒன்றியதிமுக செயலாளர் பிரபாகரன், துணை பொது மேலாளர் (தொழில்நுட்பம்) ராமமூர்த்தி, துணை பொது மேலாளர் (வணிகம்) ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி கிளை மேலாளர் கலந்து கொண்டனர் மேலும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சீர்காழி முதல் வடரெங்கம் வரை செல்லும் புதிய விடியல் பேருந்துகள் மற்றும் சீர்காழியிலிருந்து செம்பதன்இருப்பு வழியாக மயிலாடுதுறை செல்லும் நகரப் பேருந்து கொடி அசைத்து தொடங்கி வைத்து பேசுகையில், இந்த இரண்டு பேருந்துகளும் அகனி, வள்ளுவக்குடி, கொண்டல், அகர எலத்தூர், வடரெங்கம், தென்னலக்குடி, அண்ணன் பெருமாள் கோவில், காத்திருப்பு, சென்பதனிருப்பு, கீழையூர், செம்பனார்கோவில் ஆகிய பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார். விழாவில் தொமுச மத்திய சங்க பொருளாளர் திருவரசமூர்த்தி, நிர்வாகிகள் அபூபக்கர் சித்திக் ,மோகன், அன்பழகன், குழந்தைவேலு, பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *