தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல் :9715328420
தாராபுரத்தில் வரத்து அதிகரித்ததால் முருங்கைக்காய் விலை சரிந்து ரூ.20-க்கு விற்பனை ஆனது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் விவசாயிகள் முருங்கைக்காய் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த இரண்டு வாரங்களாக முருங்கை மரங்களில் பூ மற்றும் பிஞ்சுகள் அதிக அளவில் பிடித்து முருங்கை மரம் பூத்துக் குறுங்கி வருகிறது. இதனால் முருங்கை காய்கள் வரத்து அதிகரித்துள்ளது.
தாராபுரம் உழவர் சந்தைக்கு விவசாயிகள் தாராபுரம் மட்டுமன்றி குண்டடம், மேட்டுக்கடை, சூரியநல்லூர், கோவிந்தாபுரம், பஞ்சப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து முருங்கைக்காய்களை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
உழவர் சந்தையில் முருங்கைக்காய் ஒரு கிலோ சில மாதங்களுக்கு முன்பு 100 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி முருங்கைக் காய் வரத்து தற்போது அதிகரித்திருப்பதால் படிப்படியாக விலை குறைந்து கிலோ ரூ.20 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
இதுகுறித்து தாராபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், தற்போது முருங்கை மரங்களில் பூ மற்றும் முருங்கைப் பிஞ்சுகள் அதிக அளவில் இருப்பதால் முருங்கைக்காய் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் முருங்கைக்காயின் விலை கிலோ 100 ரூபாயிலிருந்து ரூ.20-க்கு குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது முருங்கைக்காய் வரத்து அதிகரிப்பு காரணமாகவே முருவகைக்காயின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது என்றார். முருங்கைக்காய் விளை வீழ்ச்சியால் விவசாயிகளுக்கு பெருத்த அளவில் நஷ்டம் ஏற்பட்டு உள்ளதால் அவர்கள் கவலை அடைந்து உள்ளார்கள். எனவே அரசு முருங்கைக்காய் பதப்படுத்தும் குளிர்பன கிடங்கு அமைத்து தரவேண்டும் என மூலனூர்-தாராபுரம்- கோவிந்தாபுரம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.