பேரையூர் அரசு நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பேரையூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது. இப்பள்ளி 1881 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது வரை கல்விப் பணியில் சிறந்து விளங்குகின்றது ,இதனால் பல்வேறு கிராமப்புற மாணவர்கள் இங்குபடித்து பயன்பெற்று வருகின்றார்கள்,
தற்போது பள்ளியின் 145 ஆம் ஆண்டு விழா, கலை மற்றும் விளையாட்டு விழா, நூற்றாண்டு விழா ஆகிய நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து முப்பெரும் விழாவாக நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் மு. பாக்கியலட்சுமி தலைமை வகித்தார்,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு,மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சேதுராமு ஆகியோர் முன்னிலை வகித்தார்கள், பட்டதாரி ஆசிரியர் இரா.அரி கிருஷ்ணன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
முன்னதாக பள்ளியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் முன்னாள் மாணவர்கள் சார்பில் பேரையூர் கிராமத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் சேர்ந்து பள்ளிக்கூடத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர முன்வந்து பிரோ,மின்விசிறி, குடம்,துடைப்பம் இதர பொருட்களை முக்கிய தெருக்கள் வழியாக ஊர்வலமாக எடுத்து சென்று பள்ளிக்கு வந்து தந்தனர்
பிறகு பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக கமுதி வட்டார கல்வி அலுவலர்கள் சண்முகம், பாண்டீஸ்வரி, காசி, கமுதி வட்டாட்சியர் காதர் மொய்தீன், கமுதி ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரசேகரன், சந்திரமோகன், வட்டார மேற்பார்வையாளர் ஸ்ரீராம்,தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் அருள்,கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார், ஆசிரியர் பயிற்றுனர் சித்தி ஜூனைதா பானு, ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள் கலை நிகழ்ச்சி விளையாட்டுப் போட்டி, படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார்கள்.
முன்னதாக நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் அன்னக்கிளி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார். மாணவர்களுடைய தனித்திறமை போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், கிராமப்புற பாடல்கள், விழிப்புணர்வு நாடகங்கள், ஆகிய நிகழ்ச்சியில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்
அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேரையூர் சுற்றியுள்ள அனைத்து கிராம பொதுமக்கள், கிராம முக்கியஸ்தர்கள்,முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள்,சத்துணவு பணியாளர்கள், தமிழக ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள்,கிராமப் பெரியோர்கள் மாணவ, மாணவிகள் அனைத்து ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள். இடைநிலை ஆசிரியர் ஆறுமுகம் நன்றி கூறினார்.