தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உலக வன தினத்தை முன்னிட்டு வனத்துறையின் சார்பாக முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சொர்ணம் ஜெ. நடராஜன் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் துணை இயக்குனர் மேகமலை புலிகள் சரணாலயம் துணை இயக்குனர் சி ஆனந்த் மாவட்ட வன அலுவலர் சமர்த்தா உதவி வன அலுவலர் தலைமையில் அரவிந்த் ஆகியோர் முன்னிலையில் பசுமையை போற்றும் விதமாக மரக்கன்றுகள் நடும் விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் தண்ணீர் ஊற்றியும் அந்த மரக்கன்றை தொடர்ந்து பராமரிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர் இரா நல்லதம்பி மிகச் சிறப்பாக செய்திருந்தார்