2025-2026-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் இரண்டு கட்ட போராட்டங்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் நாளை 23 மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.

அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டத்தில் பழங்காநத்தம் ரவுண்டானா அருகில் நடைபெற உள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் மதுரை மாவட்டத்தில் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் சுமார் 4,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர் களில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் இயக்க உறுப்பினர் களாக உள்ள அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்க உள்ளனர்.

1.4.2003-க்குப் பிறகு அரசு பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தினை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும்.

காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்டர் விடுப்பு ஒப்படைப்பு அறிவிப்பான 1.4.2026 என்பதை 1.4.2025 முதல் என மாற்றியமைத்து அதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும். உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்ட அநீதி களையப்பட வேண்டும்.


தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண்:243ஐ உடனடியாக ரத்து செய்திட வேண்டும்.
கல்லூரி பேராசிரியர் களுக்கான நிலுவையில் உள்ள பணி மேம்பாட்டு ஊக்க ஊதிய உயர்வை உடனடியாக வழங்கிட வேண்டும்.

உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு செய்ய வேண்டும்.
சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் எம்.ஆர்.பி செவிலியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள், ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும்.
அரசின் பல்வேறு துறைகளில் 30% மேலாக காலியாக உள்ள பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்பிடுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை அரசு ஊழியர், ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்கிட வேண்டும்.
2002 முதல் 2004 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பணிக்காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணி வரன்முறை படுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில்23.3.2025 –
அன்று மதுரை மாவட்டம் பழங்காநத்தம் ரவுண்டானா அருகில் நடைபெற உள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் இயக்க உறுப்பினர்கள் முழுமையாக பங்கேற்க உள்ளனர் எனதமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்டச்செயலாளர் சீனிவாசன் மதுரை மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் ஜாக்டோ ஜியோ சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத் திட்டமிடுதல்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் தனது கருத்தினை பதிவு செய்தார்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *