2016 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவராக முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையில் தேர்தலை சந்தித்தபோதில் இருந்து பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வாக்குறுதி கொடுக்கப்பட்டது.
2021 ஆம் ஆண்டு மே மாதம் 7 ந்தேதி ஆட்சிக்கு வந்த திமுக இன்னும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை.
இந்த பட்ஜெட்டில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தினமும் பகுதிநேர ஆசிரியர்கள் முதல்வருக்கு கோரிக்கை மனு தமிழகம் முழுவதும் அனுப்பி வருகின்றனர்.
அதில் தருமபுரி மாவட்டத்தில் மு.கருணாநிதி என்ற பெயரை கொண்ட ஒரு பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர் முதல்வருக்கு இந்த கோரிக்கை மனுவை தபால் அனுப்பி உள்ளார்.
கருணாநிதி ஆசிரியரின் இந்த கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றுவார் என காத்துள்ளார்.
இது குறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் கூறியது :
கலைஞர் கருணாநிதி 2016 தேர்தல், முதல்வர் ஸ்டாலின் 2021 தேர்தல் என இரண்டு முறையும் திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வாக்குறுதி கொடுக்கப்பட்டது.
இந்த பட்ஜெட்டில் நிறைவேற்ற முதல்வருக்கு தமிழகம் முழுவதும் கோரிக்கை மனுவை பகுதிநேர ஆசிரியர்கள் தபால் அனுப்பி வருகின்றார்கள்.
இதில் மு.கருணாநிதி என பெயரை கொண்ட ஆசிரியரே தருமபுரியில் இருந்து முதல்வருக்கு பணி நிரந்தரம் கேட்டு மனு அனுப்பி உள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் அப்பா பெயர் கொண்ட ஆசிரியர் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
அதுபோல மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தல் நேரத்தில் முதல்வர் பெயர் கொண்ட பகுதிநேர ஆசிரியரிடம் பேசும்போது அந்த ஸ்டாலின் கோரிக்கையை இந்த ஸ்டாலின் முதல்வர் ஆனால் நிறைவேற்றுவேன் என சொன்னார்.
இப்படி சொன்ன நம்பிக்கையை தான், 12 ஆயிரம் குடும்பங்கள் சார்பில் முதல்வருக்கு தினமும் கோரிக்கையாக தபால் அனுப்பி வருகிறார்கள்.
முதல்வர் மனது வைத்தால் போதும்.
14 ஆண்டு தற்காலிக வேலை, 12,500 ரூபாய் தொகுப்பூதிய சம்பளம் கைவிட்டு, காலமுறை சம்பளம், பணி நிரந்தரம் ஒன்றே பகுதிநேர ஆசிரியர்களுக்கு நிரந்தரமான தீர்வு.
இதை முதல்வர் 12 ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரம் மேம்பட இந்த பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும்.
—
எஸ். செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு,
செல் : 9487257203