கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பவனேஸ்வரர் திருக்கோயிலில் வருடந்தோறும் மாசிமக திருத்தேர் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும்.அதேபோல் இந்த வருடமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள்(பெண்களும்)திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இந்த மாசிமக திருத்தேர் திருவிழாவை முன்னிட்டு அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக இந்த ஆண்டும் மாபெரும் அன்னதானம் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் வந்து அன்னம் பெற்றுச் சென்றனர்.இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக வாழைக்காய் வியாபாரி சேட் மற்றும் சங்கத்தின் தேசிய தலைவர் அருள்வேலன் ஜி ஆகியோர் கலந்து கொண்டு அன்னதான விழாவை தொடங்கி வைத்தனர்.

இந்த மாபெம் அன்னதான விழா ஏற்பாடுகளை சங்கத்தின் பொறுப்பாளர்கள் ராமகிருஷ்ணன்,தியானேஷ்வரன் , கருணாநீதி, வெங்கடேஷ், மதியழகன்,அர்ச்சகர் மஹா விஷ்ணு ,சந்தோஷ், வினோத்,கோபி, சரவணன், சக்தி,முகிலன்,செந்தில், ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Share this to your Friends