பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன்
பாபநாசம் அருகே நல்லூர் மகத்திற்கு பிரசித்திபெற்ற கிரி சுந்தரி சமேத ஶ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தீர்த்தவாரி..
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே நல்லூரில் அமைந்துள்ள உலக முதன்முறை மகம் பிறந்த ஸ்தலமாக போற்றப்படும், அருள்மிகு ஸ்ரீ கிரி சுந்தரி சமேத ஶ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில், தீர்த்தவாரி நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் கிரி சுந்தரி சமேத ஶ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி எழுந்தருள திருவிடைமருதூர் கட்டளை திருச்சிற்றம்பலம் தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க திருக்கயிலாய வாத்தியங்கள்,சட்ட மேளதாளத்துடன் வாத்தியங்கள் முழங்க
கோவில் முன்பு அமைந்துள்ள குளத்தில் பஞ்ச மூர்த்திகளுக்கு சந்தனம் மஞ்சள் தேன் உள்ளிட்ட மூலப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்து தீர்த்தவாரி வெகு விமர்சையாக நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதுசமயம் உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து ஏராளமான பக்தர்கள் தீர்த்தவாரியில் கலந்து கொண்டு புனித நீராடினர்.விழாவின் ஏற்பாடுகளை கோவில் அறநிலையத்துறை அதிகாரிகள், நிர்வாகிகள் ,கிராம மக்கள் செய்திருந்தனர்