புதுச்சேரி வில்லியனூர் திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மகா தீர்த்தவாரியை முன்னிட்டு சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக அர்ச்சனைகள் நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் பக்தர்கள் சாலை மாறுமாக வந்து குவிந்து வருகின்றன பக்தர்கள் நேராக புண்ணிய நீரான சங்கராபரணி ஆற்றில் தலை முழுகி நீராடிய பிறகு அதில் சிலர் முன்னோர்களுக்கு நினைவூட்டும் வகையில் தர்ப்பணம் கொடுத்தும் முன்னோர்களை வணங்கினர் பக்தர்கள் கூட்டம் நெரிசல் அதிகமாக காணப்பட்டதால் காவல்துறை கண்காணிப்பில் பக்தர்கள் வரிசையில் சென்று சிவபெருமானை வணங்கிச் சென்றனர் இதனைத் தொடர்ந்து ஆங்காங்கே சில அமைப்புகள் மூலம் அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது