பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன்

பாபநாசம் அருகே நல்லூர் ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் குளக்கரையில் மாசிமகத்தை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு…..
தஞ்சாவூர் மாவட்டம்
பாபநாசம் அருகே நல்லூர் ஸ்ரீ கிரிசுந்தரி சமேத கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் குளக்கரையில் மாசிமகத்தை முன்னிட்டு பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களை நினைத்து அரிசி, காய்கறிகளை தானமாக வழங்கி திதி கொடுத்து வழிபட்டனர்.
மகம் பிறந்த கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் குளக்கரையில் புனித நீராடினால் காசியில் புனித நீராடிய புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்,
இத்தகைய சிறப்புமிக்க மகம் பிறந்த கோவில் குளக்கரையில் மாசி மகத்தை முன்னிட்டு பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களை நினைத்து காய்கறிகள் அரிசி இவற்றை புரோகிதர்களுக்கு தானமாக வழங்கி அகல் விளக்கு ,சூடம் ஏற்றி எள் தண்ணீரை காவிரி ஆற்றில் விட்டு சூரியனை வழிபட்டனர்.
இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தனர்.