“தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாதுளம்பேட்டை மாரியம்மன் கோவில் தெரு அருகில் ஆதிலட்சுமி நகர் அமைந்துள்ள ஸ்ரீவிஜய கணபதி ஆலயத்தில் கடந்த ஜனவரி மாதம் 19 -ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.:”
லயன் விஜயன் இல்லத்தின் வெளி வளாகத்தில் புதிதாக அமைந்துள்ள ஸ்ரீவிஜய கணபதி ஆலயத்தில் நடந்ததால் சுற்றியுள்ள நகரவாசிகள் மற்றும் பொதுமக்கள்
வந்து தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடந்து வந்தது. அதன்படி தினமும் உச்சிக்காலத்தில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மண்டல பூஜையையொட்டி ஸ்ரீவிஜய கணபதி கோவிலுக்கு தினமும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்துவிட்டு சென்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். இதனால் திருவிழாவைப்போல் கூட்டம் அலைமோதியது.
இந்நிலையில் ஸ்ரீவிஜய கணபதி கோவில் கும்பாபிஷேக மண்டல பூஜை இதையொட்டி 09-03-2025 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.05 மணியாவில் மண்டல பூஜை. யானது பிரதான கலசம் வைத்து சிறப்பு யாகம், கணபதி ஹோமம்,, நவக்கிரக ஹோமம் , சங்கு பூஜை மற்றும் இறைவனுக்கும் பிடித்த மிகவும் அவரை குளிர வைக்கும் அபிஷேகம் சங்கடங்களை போக்கி சகல சௌபாக்கியங்களும் தரும்.
பின்னர் யாகசாலையில் வைக்கப்பட்ட கலசம் மேளதாளம் முழங்க உட்பிரகாரம் வலம் வந்தது. பின்னர் உச்சிக்கால பூஜையில் ஸ்ரீ விஜய் கணபதிக்குமஞ்சள் சந்தனம்,பன்னீர் பால் தயிர் பஞ்சாமிர்தம் ,இளநீர் போன்ற திரவப் பொருட்களால் மற்றும்
கலசநீரால் சிறப்பு அபிஷேகம், 1,08 சங்காபிஷேகம் நடந்தது. மலர்கள் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.பூஜை முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.