தரங்கம்பாடி அருகே சின்னங்குடி, அம்மன் ஆறு மற்றும் தெற்காற்றில் இருபுமும் தடுப்பு சுவர் அமைக்க கோரி மக்கள் மசோதா கட்சியினர் மற்றும் மீனவ கிராமங்களைச் சார்ந்த 500க்கும் மேற்பட்டோர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்:-

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சின்னங்குடி, தாழம்பேட்டை ,சின்னமேடு, ஆகிய மீனவ கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அம்மன் ஆற்றின் இருபுறமும் தடுப்புச் சுவரோடு சேர்த்து தெற்கு ஆற்றில் தாழம்பேட்டை கிராமத்திற்கு செல்லும் பகுதியில் இருபுறமும் கருங்கல் சுவர் அமைத்து தர வலியுறுத்தி ஆக்கூர் முக்கூட்டில் வீரபாண்டிய கட்டபொம்மன் மக்கள் பொதுநல மன்றம் மற்றும் மக்கள் மசோதா கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மக்கள் மசோதா கட்சியின் தலைவர் மாயா.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சின்னங்குடி ,சின்னமேடு, தாழம்பேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சார்ந்த பொதுமக்கள் மற்றும் மக்கள் மசோதா கட்சியைச் சார்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பாகவே கோரிக்கையை சட்டமன்றத்தில் நிறைவேற்றுவதாக அறிவித்தும் இதுவரை நிறைவேற்றப்படாததை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Share this to your Friends