மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியில் பணியாற்றும் பொருளாதாரத் துறைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தக் கல்லூரியின் பொருளாதாரத் துறையில் சுமார் 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தத் துறை மாணவர்களின் நலனுக்கு விரோதமாக பொருளாதாரத் துறைத் தலைவர் செயல் படுவதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு குற்றச்சாட்டு எழுந்தையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாணவர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர்.
அப்போது. கல்லூரி நிர்வாகம் சார்பில் விசாரணைக் குழு
அமைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதால், மாணவர்கள் தர்ணா போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது..
இந்த நிலையில் 2 வாரங்களுக்கு மேலாகியும் பொருளாதாரத் துறைத் தலைவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாண வர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொருளாதாரத்துறைத் தலைவர் மீது மாணவர்கள் அளித்த குற்றச் சாட்டு தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு 5 பேர் கொண்ட குழு கடந்த 7-ம் தேதி அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் இந்தக்குழுமூலம் உரிய விசாரணை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்ததை தொடர்ந்து
மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.