பிரபல சினிமா டைரக்டர் சுந்தர் சி 1995இல் முறை மாமன் என்ற படத்தை இயக்கினார். அதில் கதாநாயகியாக நடித்த குஷ்பு விற்கும், அவருக்கும் காதல் ஏற்பட்டது. பின்பு 2000 ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அவந்திகா ஆனந்திகா என்ற இரு மகள்கள் உள்ளனர். குஷ்பூ தற்பொழுது பாரதிய ஜனதா கட்சியில் உள்ளார். சுந்தர்.சி தமிழ் திரைப்படங்களில், தமிழ் திரைப்பட உலகில் பிரபல இயக்குனராக உள்ளார்.

இவரது இயக்கத்தில் வந்த அரண்மனை படமும், மதகத ராஜா படமும், ஏற்கனவே ஹிட்டானது. தற்பொழுது நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் மற்றும் கேங்கர்ஸ் ஆகிய படங்களை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் பழனி முருகன் மலை கோவிலில் நடிகை குஷ்புவும், சுந்தர்சியும் வருகை புரிந்தனர். சுந்தர்.சி மொட்டை அடித்து முருகப்பெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார். இதில் குஷ்பு கூறியதாவது: தனது திருமணத்தின் போது அணிந்த புடவையை அணிந்து வந்து சாமி கும்பிட்டேன் என்று கூறினார்.

Share this to your Friends