தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் தின விழா சென்னை தாம்பரத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.இதில் பல்வேறு துறைகளில் சாதனை செய்த பெண்களுக்கு
பெரியார் கண்ட புரட்சி பெண்,பாரதி கண்ட புதுமைப் பெண்,கலைஞர் கண்ட எழுச்சிப் பெண்போன்ற விருதுகள் வழங்கி மகளிர் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் மாநில மகளிர் அணி செயலாளர் வந்தனா தலைமை வகித்தார் .
மாநில மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் நித்திய நிர்மல் முன்னிலை வகித்தார். மாநில மகளிர் அணி இணை ஒருங்கிணைப்பாளர் மெஹராஜ் பேகம் அனைவரையும் வரவேற்றார். பல்வேறு துறைகளில் சாதனை படைத்த தமிழ்நாடு அரசு விருது பெற்ற தஞ்சை ஓவியர் மேனகா நரேஷ், செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றி செல்வி, காவல்துறை துணை கண்காணிப்பாளர் நந்தினி, மருத்துவர் கிருத்திகா தேவி, பொழிச்சலூர் ஊராட்சி மன்ற தலைவர் வனஜா தயாளன் ஆகியோருக்கு பெரியார் கண்ட புரட்சிப் பெண் விருது வழங்கப்பட்டது.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் கு.தியாகராஜன் மற்றும் தமிழ்நாடு தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் முனைவர் பூ.ஆ.நரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் மாநில செயலாளர்கள் அருள் குமார், பொருளாளர் உதயகுமார், மாநில தணிக்கை குழு உறுப்பினர் சந்திரன், மாநில துணைச் செயலாளர் பத்மநாபன் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மகளிர் தின விழாவில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கு.தியாகராஜன் விழா பேருரை ஆற்றி பேசியதாவது இடைநிலை ஆசிரியர்களாக பெண்களே நியமிக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்தவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பல்வேறு சலுகைகளை வழங்கியவர்.
சொத்தில் சம பங்கு என்று ஆணை பிறப்பித்தவர். இன்று தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் மகளிர்காண மகப்பேறு விடுப்பினை ஒரு ஆண்டுகளாக உயர்த்தி வழங்கியவர். பல்வேறு சலுகைகளை அறிவித்தவர் என்றும், விரைவில் நாம் எதிர்பார்க்கிற பழைய ஓய்வூதிய திட்டம், சரண்டர் விடுப்பு ஒப்படைப்பு, மீண்டும் பழைய முறைப்படி உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் 2004 2006 தொகுப்பூதிய காலத்தை நிரந்தர பணிக்காலமாக அறிவித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்று கூறினார்.
தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் முனைவர் பூ.ஆ. நரேஷ் விருதுகள் வழங்கி விழா சிறப்புரையாற்றி பேசும் பொழுது இன்று தமிழ்நாடு கல்வித்துறை தன்னிகரில்லா வளர்ச்சி பெற்று உள்ளது.
இந்த வளர்ச்சிக்கு மிக முக்கியம் காரணம் அரசு பள்ளி ஆசிரியர்கள். குறிப்பாக தொடக்க கல்வித்துறை பணியாற்றக் கூடிய ஆசிரியர்கள் பங்களிப்பு மிக அதிகம், அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் சூழலில் பெரும்பான்மையாக பணியாற்றும் பெண்ணாசிரியர்கள் மேலும் தங்களின் பங்களிப்பை அதிகரித்து தமிழ்நாடு முதன்மை மாநிலமாக இந்தியாவில் வலம் வர முயற்சி செய்ய வேண்டும் என்றும், நீங்கள்தான் மாணவர்களின் இரண்டாம் பெற்றோர்கள் என்றும், உங்களின் பணி அர்ப்பணிப்பு பணி அதை செய்து வரும் நீங்கள் போற்றுதலுக்குரியவர்கள் என்றும் பேசினார். நிறைவாக மாவட்ட மகளிர் அணி செயலாளர் புவனேஸ்வரி நன்றி கூறினார்.