அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே 66.எம்.பள்ளபட்டி கிராமத்தில் அமைந்துள்ள
ஶ்ரீ மார்நாடு பெரிய கருப்புசாமி,சின்னகருப்புசாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில் மங்கள வாத்தியம் முழங்க விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், புண்ணியாக வாசகம், மகா கணபதி ஹோமம், தன்வந்திரி ஹோமம், உள்ளிட்ட நான்கு கால சிறப்பு ஹோமங்கள் தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து யாகசாலையில் இருந்து சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடாகி அழகர்கோவில், ராமேஸ்வரம் உள்ளிட்ட புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கோவிலை சுற்றி வலம் வந்து கோவில் கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை 66.எம்.பள்ளபட்டி கிராம பொதுமக்கள், ஸ்ரீ மார்நாடு கருப்பசாமி பங்காளிகள் செய்திருந்தனர்.

Share this to your Friends