சீர்காழி அருகே திருவெண்காட்டில் சீர்காழி கிழக்கு ஒன்றியம் திமுக சார்பில் முதலமைச்சரின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காட்டில் சீர்காழி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் பஞ்சுகுமார் ஏற்பாட்டில் முதல்வரின் 72 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது

மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் தலைமையில் நடைபெற்ற விழாவில் தலைமைக் கழக பேச்சாளர் நாத்திகம் நாகராஜ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்

இந்நிகழ்வில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முத்து மகேந்திரன் ஜி.என்.ரவி மற்றும் சீர்காழி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர்தினேஷ் குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் பொறுப்பாளர்களும் ஏராளமான தொண்டர்களும் கலந்து கொண்டனர் அனைவருக்கும் மரக்கன்றுகளும் புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

Share this to your Friends