அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் உலக மகளிர் தின விழாச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட காவல் அலுவலகத்தில்,நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாஜ் I.P.S., தலைமை தாங்கி, பெண்களின் பெருமை குறித்து பேசி, உலக மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் காவல் அதிகாரிகள் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் பெண் காவலர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் கேக் வெட்டி உலக மகளிர் தினத்தை சிறப்பாக கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் .விஜயராகவன் அரியலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் .ரகுபதி அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு உலக மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
மேலும், இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து பெண் ஊழியர்களும் ஒரே மாதிரியான சேலை அணிந்து வந்து பங்கேற்றனர்.