கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி 2025 -26 ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கான விழிப்புணர்வு முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவரும், பள்ளி மேலாண்மை உறுப்பினர் முத்துக்குமார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணியில் அக்கச்சிப்பட்டி முழுவதும் பள்ளி வயது குழந்தைகளை எங்கள் பள்ளியில் சேர்க்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பெற்றோர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார்.
கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளரும், பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா அரசு பள்ளியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பேசும்போது
அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் கல்வி பயில ஸ்மார்ட் வகுப்பறைகள் , நவீன தொழில்நுட்பத்தில் ஹைடெக் ஆய்வகம், திருவள்ளுவர் தமிழ் மன்றமும், ஷேக்ஸ்பியர் ஆங்கில மன்றமும், ராமானுஜம் கணித மன்றமும், ஆல்பிரட் ஐன்ஸ்டீன் அறிவியல் மன்றம், சுற்றுச்சூழல் மன்றம், நுகர்வோர் மன்றம், மகிழ்முற்றம் உள்ளிட்ட மன்றங்கள் சிறப்பாக செயல்பட்டு மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித்தொகை தேர்வுக்கான சிறப்பான முறையில் பயிற்சி அளிக்கப்படுகின்றது. தினசரி தேர்வுகள் மூலம் மாணவர்கள் தயார் செய்யப்பட்டு வருகிறார்கள்.
தேசிய வருவாய் வழி திறன் படிப்புக்கான உதவித்தொகை தேர்வில் எங்கள் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் இதுவரை நான்கு பேர் தேர்வு பெற்றுள்ளனர் . துளிர் திறனறிவுத் தேர்வு,
அறிவியல் ஒளி தேர்வில் வெற்றி பெற்று கல்வி சுற்றுலா சென்று வந்துள்ளனர்.
அறிவியல் ஆய்வகம் மூலம் மாணவர்களுக்கு அறிவியல் மனப்பான்மை வளரக்கூடிய வகையில் அறிவியல் பரிசோதனைகள் மூலம் கற்பிக்கப்படுகிறது.
போட்டித் தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்க பயிற்சி,
தமிழில் சிறந்த கையெழுத்து பயிற்சி, ஆங்கிலத்தில் பேச்சு பயிற்சிகள் உள்ளிட்ட பயிற்சிகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.
மாணவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய வகையில் கலைத் திருவிழா , போட்டிகளில் ஒன்றிய அளவில் வெற்றி பெற்று மாவட்ட அளவில் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்துள்ளனர்.
சிறப்பான மன்ற செயல்பாடுகள் மூலம் தங்களுடைய திறமைகளை மாணவர்கள் வெளிப்படுத்துகின்றனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் நடைபெறக்கூடிய துளிர் திறனறிவுத் தேர்வு, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தல், வினாடி வினா,மேலும் தேசிய அறிவியல் தினம், பறவைகள் தினம் ,மகளிர் தினம் முதல் தினந்தோறும் நடைபெறக்கூடிய முக்கிய தினங்கள் கொண்டாடப்பட்டு மாணவர்களுக்கு பொது அறிவு கற்று தரப்படுகிறது. தற்போது எங்கள் பள்ளியில் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அக்கச்சிப்பட்டியில் சேர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டவரும் எண்ணும் எழுத்தும் திட்டம், இல்லம் தேடிக் கல்வித் திட்டம், வானவில் மன்ற செயல்பாடுகள், காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். எங்கள் பள்ளி நூலகத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட நூல்கள் ,தினசரி செய்தித்தாள்கள், பருவ இதழ்கள் மூலம் மாணவர்களுடைய அன்றாட நடப்பு நிகழ்வுகளை அறிந்து கொள்கின்றனர்.
காலை உணவு திட்டம் கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
தேன் சிட்டு, ஊஞ்சல் சிறார் இதழ்கள் மூலம் வாசிப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. அரசுப் பள்ளியில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் புதுமைப்பெண், அரசு பள்ளியில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு உயர்கல்வியில் மருத்துவம் பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் 7 .5 இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
அரசு வேலை வாய்ப்புகளில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலக் கூடிய மாணவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எனவே பெற்றோர்கள் எங்கள் பள்ளியில் குழந்தைகளை சேர்த்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்நிகழ்வில் ஆசிரியர்கள் சிந்தியா, நிவின்,வெள்ளைச்சாமி, ஜெம்ம ராகினி சகாய ஹில்டா, பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள்
பெற்றோர்கள், முருகனாந்தம், பிரியா தேவி, நிர்மலா, பிரியா ,சுதா, உள்ளிட்ட கலந்து கொண்டனர்.