ஒன்றிய பா.ஜ.க அரசின் பழிவாங்கும் அரசியலை நிறுத்த வலியுறுத்தியும்,
அமலாக்கத்துறையின் அநீதியான கைது நடவடிக்கையை கண்டித்தும், SDPI கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே.ஃபைஜி அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் ஈரோடு தெற்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில் மாவட்ட தலைவர் S.அப்துல் ரகுமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலாளர் அ.சாகுல் ஹமீது வரவேற்புரையாற்றினார்.
கோவை மண்டல செயலாளர் ப.முகமது லுக்மானுல் ஹக்கீம் அவர்கள் கண்டன உரையாற்றினார்.
மாவட்டத் துணைத்தலைவர் குறிஞ்சி.பாஷா, மாவட்ட செயலாளர் க.முனாப், மாவட்ட பொருளாளர் H.முகமது ஜாபீர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தளபதி K.S.பசீர், M.முஹமது ஹசன் அலி, A.S.முகமது மன்சூர், IT விங் மாவட்டச் செயலாளர் S.மன்சூர், SDPI மகளிர் அணியான விமன் இந்தியா மூவ்மெண்ட் (WIM) மாவட்ட தலைவர் M.சகிலா பானு, மாவட்ட செயலாளர் A.ரஷிதா, SDPI ஈரோடு கிழக்கு தொகுதி செயலாளர் முகமது பர்மானுல்லா, துணைத்தலைவர் அப்துல் சலாம், பவானி தொகுதி தலைவர் ஜாஹிர் உசேன், செயலாளர் ஜன்னத்துல் ஃபிர்தௌஸ், துணைத் தலைவர் முஹம்மது அகில், பொருளாளர் தர்வேஸ் மைதீன் உள்ளிட்ட தொகுதி, வார்டு நிர்வாகிகள், செயல்வீரர்கள் திரளாக கலந்துகொண்டு ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.