செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள எலப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நூற்றாண்டு நிறைவு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.


எலப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்
பள்ளியின் நூற்றாண்டு விழா நினைவாக ரூ 80 ஆயிரம் மதிப்பீட்டில் நிரந்தர விழா மேடையை பள்ளி வளாகத்தில் அமைத்து தந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவரும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஓய்வு பெற்ற அதிகாரியுமான சு.ஜெயகுமார் அவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் வட்டார கல்வி அதிகாரி கிருஷ்ணா மற்றும் பழனிவேலன் மேற்பார்வையாளர் சிவராமகிருஷ்ணன் விழாவில் பங்கு பெற்று
பாராட்டு உறை வழங்கினர்.

இதில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் வே.தேன்மொழி பரிசுகள் வழங்கி பாராட்டினார். இவ்விழாவில்
நன்கொடை வழங்கி விழாவை சிறப்பித்த பள்ளி மேலாண்மை குழு
பெற்றோர் ஆசிரியர் கழகம் மேலும் பள்ளிக்கு 15 சென்ட் நிலம் வழங்கிய மறைந்த
விமானப்படை அதிகாரியாக பணியாற்றிய பாலகிருஷ்ணன் அவரின் குடும்பத்தினரை அழைக்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது.

தொடர்ந்து விழாவில் மற்ற நன்கொடை பொருட்களை வழங்கிய நன்கொடையாளர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது.
இப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர்களையும் சுற்று வட்டார பள்ளி தலைமை ஆசிரியர்களையும் அழைத்து கௌரவிக்கப்பட்டனர்.
விழாவில் கலந்து கொண்ட அத்தனை நபர்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

Share this to your Friends