கந்தர்வக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் உலக வனவிலங்கு தினத்தை முன்னிட்டு ஒவியப் போட ட்டி ஆறு முதல் எட்டு வகுப்பு வரை 40க்கு மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு நடைபெற்ற பெற்றது.
போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களை தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி பாராட்டினார்.தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளரும், அறிவியல் ஆசிரியர் ரகமதுல்லா உலக வனவிலங்கு தினம் தினம் பேசும்பொழுது
உலக வனவிலங்கு தினம் ஆண்டுதோறும் மார்ச் 3-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இது, காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் அழகைப் போற்றி, அவற்றின் பாதுகாப்பைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கொண்டாடப்படுகிறது.
என்று பேசினார். இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மணிமேகலை, சிந்தியா உள்ளிட்டோ கலந்து கொண்டனர்.