அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது தாய் உயிரிழப்பு விசாரணை, இழப்பீடு கேட்டு குடும்பத்தினர், உறவினர்கள் ஆட்சியரிடம் மனு
அரியலூர்
அரியலூர் தலைமை அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது தாய் உயிரிழந்த நிலையில், மருத்துவர்களிடம் உரிய விசாரணை மற்றும் இழப்பீடு கேட்டு அப்பெண்ணின் குடும்பத்தினர், உறவினர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அரியலூர் மாவட்டம் கல்லக்குடி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் முத்துராஜ்(27). இவருக்கு திருமணமாகி ஒரு ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில், முத்துராஜ் மனைவி திவ்யதர்ஷியை(20) கர்ப்பமடைந்த நிலையில், பிரசவத்துக்காக அரியலூர் தலைமை அரசு மருத்துவமனையில் பிப்.1-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். பிப்.2-ம் தேதி அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் முத்துராஜிடம், கையெழுத்து பெற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். ஆனால், திவ்யதர்ஷினி உயிரிழந்து விட்டார்.
ஆண் குழந்தை பிறந்தது.இந்நிலையில், அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பெண்ணின் குடும்பத்தினர், உறவினர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பொ.ரத்தினசாமியிடம் மனு அளித்தனர். (குறிப்பு (தகவலுக்காக) – இறந்து போன திவ்யதர்ஷினி உடல் பிப்.3-ம் தேதி உறவினர்களால் தகனம் செய்யப்பட்டுவிட்டது.