மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் சிறுதானிய மதிப்பு கூட்டு பயிற்சி. மூன்று நாட்கள் நடைபெற்ற முகாமில் பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்குவிப்பு பொருட்கள் வழங்கப்பட்டது.

தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே குத்தாலம் வட்டாரத்தில் சிறுதானிய மதிப்பு கூட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.

மகளிர் திட்ட. ஆதரவுடன் நடத்தப்பட்டது. இப்பயிற்சியில் சுயதொழில் தொடங்க விரும்பும் பயனாளிகள், சிறுதானியங்களைப் பயன்படுத்தி மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கும் முறை, பேக்கேஜிங், சந்தைப்படுத்தல் உள்ளிட்ட முக்கிய கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.

மூன்று நாட்கள் நடைபெற்ற பயிற்சி முகாமை Focus Block Development Program அதிகாரிகள் துவக்கி வைத்தனர். மேலும், பயிற்சியில் பங்கேற்ற 30 பயனாளிகளுக்கு மாவட்ட தொழில் மையத்தின் (DIC) வழிகாட்டுதலுடன் தொழில் கடன் மற்றும் தொழில் வளர்ச்சிக்கான முக்கிய தகவல்கள் வழங்கப்பட்டன.பயிற்சி முடிவில் பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்குவிப்பு பொருட்கள் வழங்கப்பட்டது.


இப்பயிற்சியை EDII-TN மாவட்ட திட்ட மேலாளர் S.மும்தாஜ் ஒருங்கிணைத்து நடத்தினார். மேலும் அடுத்த வாரத்தில் குத்தாலம் வட்டாரத்தில் பேக்கரி தயாரிப்பு பயிற்சி மற்றும் தங்கம் மதிப்பீட்டு பயிற்சி நடைபெற உள்ளது. குத்தாலம் வட்டாரத்தில் உள்ளவர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்று பயன்பெற முன் பதிவிற்கு 7904211951 என்ற அலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *