துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் ஒன்றிய திமுக சார்பில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு வழிகாட்டுதல் படி வடக்கு மாவட்ட கழக செயலாளர் காடுவெட்டி ந. தியாகராஜன் தலைமையில் 4/3/2025அன்று உப்பிலியபுரம் அண்ணா சிலை அருகில் தமிழக முதல்வர்,கழக தலைவர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.


இந்த பொதுக்கூட்டத்தில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே என் அருண்நேரு, கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். ஒன்றிய கழக செயலாளர் முத்துச்செல்வன், அர.ந.அசோகன் முன்னிலை வகித்தனர்.


இதில் வடக்கு மாவட்ட கழக துணை செயலாளர்கள் சோபனபுரம் எஸ்.கனகராஜ், மயில்வாகனன், பொருளாளர் தர்மன் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் மு.தமிழ்மாறன், எம்எல்ஏ ஸ்டாலின் குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, வீரபத்திரன்,நகர செயலாளர் மெடிக்கல் முரளி,பொது குழு கிட்டப்பா, துறையூர் நகர் மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன், முன்னாள் ஒன்றிய சேர்மன் சரண்யா மோகன்தாஸ்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் தீபா சின்ராசு, தமயந்தி பிரபு, விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ்குமார், துறையூர் நகர் மன்ற உறுப்பினர் வீரமணிகண்டன்,அறிவொளி சுப்பிரமணியன்,ராஜா மரியதாஸ், எம்ஜி பாலா, வரதராஜ்,மு.ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜசேகர், ஜெகநாதன், கலைசெல்வி சிலையழகன், இளைஞர் அணி ஸ்ரீதர், வைரி மணிகண்டன், மணிவண்ணன் மற்றும் ஒன்றிய, பேரூர் கிளைக் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து சார்பு அணியினர் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இக்கூட்டத்தில் இருமொழிக் கொள்கையை வலியுறுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டது. கூட்டநிறைவில் பேரூர் கழக செயலாளர் வெள்ளையன் நன்றி உரையாற்றினார்.

Share this to your Friends