தஞ்சாவூர் மாவட்டம் : திருநெல்வேலி அருகே பாளையங்கோட்டையில் அய்யா வைகுண்டபதியில், மார்ச் 4 ஆம் தேதி அன்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க இருந்த நிலையில், அதை காவல்துறை மூலம் தடுத்து நிறுத்திய திமுக அரசு கண்டித்து தமிழக சிவசேனா கட்சி சார்பில் கண்டன அறிக்கை வெளியிட்டது.
சிவசேனா கட்சி மாநிலத் துணைத் தலைவர் (தமிழ் நாடு மாநில கமிட்டி..) பூக்கடை எஸ் ஆனந்த் பேசியதாவது :
தமிழக அரசே காவல்துறையே இந்து உணர்வாளர்களையும் ஆன்மீக அன்பர்களையும் ஒரு தலைபட்சமாக நெருக்கடி கொடுக்கும் தமிழக அரசு
திருநெல்வேலி அருகே பாளையங்கோட்டையில் அய்யா வைகுண்டபதியில், 4.3.2025 அன்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க இருந்த நிலையில், அதை காவல்துறை மூலம் தடுத்து நிறுத்திய திமுக அரசு இதை எதிர்த்து அய்யா வழி பக்தர்கள் சாலை மறியல். ஈடுபட்டுள்ளனர்
தினம் தினம் ஆன்மீக அன்பர்கள் இந்து உணர்வாளர்கள் தங்களது ஆன்மீக உரிமையை போராட்ட குணத்துடன் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர் திராவிட மாடல் என்ற சொற்களைப் பயன்படுத்தி ஆட்சி செய்து கொண்டிருக்கும் திமுக அரசு இந்து மத வழிபாட்டுகளில் மட்டும் தலையிட்டு இடையூர் அளிப்பது வருந்தத்தக்க செயலாகும் இந்த போக்கினை தமிழக அரசு மாற்றிக்கொள்ள வேண்டும் இல்லையெனில் ஆட்சிக் கட்டிலில் அமரும் ஆசையை கைவிட நேரிடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்