மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மாசி மண்டல திருவிழாவில் சுற்றுக்கோயில் கொடியேற்றம்…..
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாசி மண்டல திருவிழாவில் சுற்றுக்கோயில் கொடியேற்றம் நேற்று நடைபெற்றது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாசி மண்டலத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சுவாமி சன்னதி பகுதியில் உள்ள கொடிமரத்தின் அருகே யாகசாலை வளர்க்கப்பட்டு பூஜை நடைபெற்றது. மீனாட்சி, சுந்தரேஸ்வரர் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.
அதை தொடர்ந்து காப்பு கட்டிய பட்டர் கொடிமரத்திற்கு பூஜை செய்தார். இதனைத்தொடர்ந்து யாகசாலையில் வைக்கப்பட்டு பூஜிக்கப் பட்ட புனிதநீரால் கொடிம ரத்திற்கு அபிஷேக ஆராதனைகள் நடந்த பின் கொடியேற்றப்பட்டது.
அன்று முதல் விநாயகர், சுப்ரமணியர், முதல் மூவர், சந்திரசேகர் சுவாமிகள் காலை, மாலை என இருவேளையும் சுவாமி சன்னதியின் 2ம் பிரகாரம் வலம் வருகின்றனர். சுவாமி சன்னதி பிரகாரத்தை சுற்றியுள்ள கொடிமரத்திற்கு சுற்றுக்கோயில் கொடியேற்றம் நடைபெற்றது.
நேற்று முதல் மீனாட்சி அம்மன் – சுந்தரேஸ்வரர் சுவாமி, காலை, இரவு என இருவேளையும் சித்திரை வீதிகளை வலம் வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து வரும் 22ம் தேதி பிரதான கொடியிறக்கி கணக்கு வாசித்தலுடன் திருவிழா நிறைவு பெறும். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன், கோயில் இணை ஆணையர் கிருஷ்ணன் ஆகியோர் செய்து வருகின்றனர்.