கலை நிகழ்ச்சிகள் மூலமாக குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய அரியலூர் மாவட்ட காவல்துறையினர்
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் I.P.S., அவர்களின் உத்தரவின் படி, மாவட்ட முழுவதும் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் குழந்தை மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
இதனையடுத்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் .விஜயராகவன் தலைமையில் அரியலூர் அண்ணா சிலையின் அருகே, கலை நிகழ்ச்சிகள் மூலமாக பொதுமக்களிடம் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்தும், போக்சோ சட்டம், குழந்தை திருமணம், போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், மற்றும்
இணைய வழி குற்றங்கள் அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரம் வழங்கினார்கள்.
மேலும் இக்குற்றங்களை குறித்து புகார் அளிக்க அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள உதவி எண்களான, இணையவழி புகார் உதவி எண் 1930, பெண்கள் பாதுகாப்பு உதவி எண் 181, குழந்தைகள் நல பாதுகாப்பு உதவி எண் : 1098, மற்றும் மதுவிலக்கு தொடர்பான புகார் உதவி எண் :10581 குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இதேபோன்று, ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்திலும் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் .விஜயலட்சுமி அவர்களின் தலைமையில் கலை நிகழ்ச்சிகள் மூலமாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர்கள் .தமிழரசன் .கிருஷ்ணமூர்த்தி, ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலைய உதவியாளர் .லட்சுமி பிரியா, மற்றும் காவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.