பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்
பாபநாசத்தில் வித்யா பாடசாலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா மாணவர்களுக்கு நிகராக மாணவிகள் நடனம் மற்றும் சாகச நிகழ்ச்சிகள் செய்து காட்டி அசத்தினர்….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் உள்ள வித்யா பாடசாலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் ஆண்டு விழா கோலாகலமாக பாபநாசம் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் பிரபாகரன், பேரூராட்சித் தலைவர் பூங்குழலி கபிலன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பிரேம்நாத் பைரன் தேன்மொழி பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் சான்றிதழ் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
இதில் மாணவ மாணவிகளின் பரதநாட்டியம், தப்பாட்டம் லிட்டர் பல்வேறு கலை நடனங்கள் சாகச நிகழ்ச்சிகள் செய்து காட்டி காண்பவரை மெய்சிலிர்க்க வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பெற்றோர்கள் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.