கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 55வது வார்டு எஸ்.ஐ.எஸ்.ஹெச் காலனி உள்ள எம்ஜிஆர் நகர் வெங்கடாசலம் நகர் ஆர் கே கே நகர் மற்றும் நாராயணசாமி நகர் உள்ளிட்ட பகுதியில் தார் சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்று மாமன்ற உறுப்பினர் அன்பு(எ)தர்மராஜ் அவர்களது முயற்சியில் 95 லட்சம் மதிப்பீட்டில் மாநகராட்சி நிதியின் கீழ் புதிய தார் சாலை மற்றும் காவிரி நகர் பகுதியில் 3.50 ஏக்கர் பரப்பரப்பில் விளையாட்டு மைதானத்திற்கு 14 லட்சம் மதிப்பில் முள்வேலி அமைக்கும் பணியினை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி அவர்களது தலைமையில் பூமி பூஜை பணியினை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் கணபதி செல்வராஜ் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் சேதுபதி மாவட்டத் துணைச் செயலாளர் தூய மணி தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயகுமார் மற்றும் உதவி பொறியாளர் வெங்கடேஷ் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மருதாசலம், தம்பு(எ)சுந்தர்ராஜ், சந்திரசேகர், பழனிச்சாமி, செல்வராஜ், விமல், மூர்த்தி, தமிழரசு ஆகியோறும் எம்ஜிஆர் நகர் வெங்கடாச்சலம் நகர் நண்பர்களும் காவேரி நகர் நண்பர்களும் திராவிட முன்னேற்ற கழக முன்னோடிகளும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக உறுப்பினர்களும் பொது மக்களும் திரளாக கலந்துகொண்டனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *