உலக அறிவியல்தின கண்காட்சி இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், பசும்பொன் அருகில் அமைந்துள்ள புனித ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் உலக அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி மற்றும் உணவுத்திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் ராமசாமிபட்டி பள்ளியின் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களின் படைப்புகளை கண்டு பாராட்டினார். மாணவர்களின் சிறந்த படைப்பிற்கு பரிசுகள் வழங்கப்பட்டன. .
பள்ளின் தாளாளர் அல்போன்ஸ்பாத்திமா மற்றும் முதல்வர் ஞானசுகந்தா அவர்களும், பள்ளியின் ஆசிரியர்களும், மாணவர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்தினார்கள்.