விருத்தாசலம்,

விருத்தாசலத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடந்தது. நகர் மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் செங்குட்டுவன், பொதுக்குழு அரங்க.பாலகிருஷ்ணன், பொருளாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக நகர துணை செயலாளர் நம்பிராஜன் வரவேற்றார். நகர இளைஞரணி அமைப்பாளர் பொன் கணேஷ் நன்றி கூறினார். இதில் நிர்வாகிகள் அறிவுடை நம்பி, பூக்கடை வெங்கடேசன், சீனிவாச காந்தி, வக்கீல் ரவிச்சந்திரன், சுந்தரமூர்த்தி, மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கடைவீதியில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்.
முன்னதாக திராவிட மாடல் அரசின் கொள்கை விளக்கம் குறித்து உறுதிமொழி ஏற்றனர். அதனைத் தொடர்ந்து பேரணியாக சென்று ஸ்டேட் வங்கி பஸ் நிறுத்தம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து திமுக கொடி ஏற்றி திமுக அரசின் 3ஆண்டுகளின் சாதனைகள் குறித்த எழுச்சி கோஷங்கள் எழுப்பினர்.