கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் காட்டுநாவலில் இல்லம் தேடி கல்வி மையத்தில் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் 72 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாணவர்கள் முதல்வரின் புகைப்படம் பொருத்திய முக கவசத்தை அணிந்து பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்விற்கு ஏற்பாடுகளை சுமதி செய்திருந்தார் .
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளரும், இல்லம் தேடி கல்வித் திட்டம் முன்னாள் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து பேசும்பொழுது
முதல்வர் அவர்களால் கொரோனா களத்தில் ஏற்பட்ட கற்றல் இழப்புகளை சரிசெய்ய இல்லம் தேடி கல்வித்திட்டம் என்னும் மகத்தான திட்டத்தை இரண்டு லட்சம் தன்னார்வலர்களைக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் தொடங்கி கொரோனா கால கற்றலில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்த முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. அதற்கு ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வு அறிக்கை தற்போது தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.
காலை உணவு திட்டம் மாணவ, மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமலிருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. காலை உணவு திட்டம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இங்கிலாந்து, கனடா நாட்டிலும் பின்பற்றப்படுகிறது என்பது நமக்கு மிகுந்த பெருமையை அளிக்கிறது.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் கீழ் நான் முதல்வன்” என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழநாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
இதன்மூலம் பல்வேறு படிப்புகள் பற்றிய சமீபத்திய தகவல்கள், தொழில்துறைகளுக்கு தேவையான குறிப்பிட்ட திறன்கள் ஆகியவை குறித்து கல்லூரி மாணவர்கள் தெரிந்து கொள்ள முடியும். தமிழ் புதல்வன், புதுமைப்பெண், அரசுப் பள்ளியில் ஆறு முதல் பன்னிரண்டு பயிலும் மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வியில் 7.5% இட ஒதுக்கீடு, கலைத்திருவிழா சிறார் இதழ்கள் தேன்சிட்டு, ஊஞ்சல், கனவா ஆசிரியர் விருது வெளிநாடு கல்வி சுற்றுலா, என எண்ணற்ற திட்டங்களை பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று பேசினார். தன்னார்வலர் காயத்ரி நன்றி கூறினார். மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது .