தாராபுரம்:முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அதிமுக திருப்பூர் புறநகர் மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் குண்டத்தில் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம்- கடைவீதியில் புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், தலைமையில் முன்னாள் முதலமைச்சா் ஜெ. ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.இதில் திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் மடத்துக்குளம் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான சி. மகேந்திரன். முன்னிலை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் பி.கே. ராஜ். ருத்ராவதி பேரூர் கழக செயலாளர் தமிழரசன். ஆகியோர் வரவேற்புரை வழங்கினர்.

இந்தக் கூட்டத்தில் புரட்சித்தலைவி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் மோகன்ராஜ் பேசுகையில்:-

புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல் டாக்டர் எம்ஜிஆர் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வைரம் புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மா ஆவார்கள் அவர்கள். ஏழை-எளிய மக்களுக்கு கரவை மாடு, கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, படித்த திருமணம் ஆகும் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் 50000/ ரொக்க பணம் மற்றும் பெண்களுக்கு வளைகாப்பு .தொட்டில் குழந்தை திட்டம். கர்ப்பிணி பெண்கள் பாதுகாப்பு பெட்டகம். மேலும் மாணவ மாணவிகள் படிக்க இலவச மிதிவண்டி, மடி க்கணினி, நோட்டு, பேனா, பென்சில், புத்தகம், சீருடை என அனைத்தையுமே இலவசமாக வழங்கியவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அவர்கள் ஜெயலலிதா அம்மாவின் வழியில் தோன்றியவர் அதிமுக கழகச் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஏழை எளிய மக்கள் நடுத்தர மக்கள் அவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திட பல்வேறு திட்டங்களை கடந்த ஆட்சிக்காலத்தில் செய்து வந்தார்.

ஆனால் தற்போது திமுக ஆட்சியில் அம்மா கொண்டு வந்த பேருந்து நிலையத்தில் பத்து ரூபாய்க்கு குடிநீர் பாட்டில்.மற்றும் பெண்களுக்கு தனி பால் ஊட்டும் அறை என பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் ஜெயலலிதா அம்மா மேலும்

அம்மா மருந்தகம். அம்மா உணவகம், அம்மா ஜிம், அம்மா நடைபயிற்சி பூங்கா என ஜெயலலிதா அம்மா கொண்டு வந்த எண்ணிலடங்கா திட்டங்களை திராவிட மாடல அரசு முடக்கி மக்களை ஏமாற்றி வருகிறது .

அம்மா அவர்கள் ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, போன்றவற்றை இல்லம் தோறும் வழங்கினார்.

ஆனால் இதுபோன்ற ஒரு திட்டத்தை கூட கடந்த மூன்று ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் திமுக அரசு மக்களுக்காக செய்யவில்லை அவர்கள் குடும்பமும் அவர்களது உறவினர்களும் அவர் கட்சிக்காரர்கள் மட்டுமே சம்பாதிக்க வேண்டும் வளமாக வாழ வேண்டும் என திட்டங்கள் தீட்டி அதனை செயல்படுத்தி வருகின்றனர்.

ஏழை எளிய மக்களே சிந்தித்துப் பாருங்கள் இதில் எது சிறந்த ஆட்சி என்று அம்மா ஆட்சி அமைய வேண்டும் என்றால் வருகின்ற 2026 இல் இரட்டை இலை சின்னத்தில் எடப்பாடி பழனிச்சாமி அண்ணனை முதலமைச்சர் ஆகினால் மட்டுமே அம்மாவால் கொண்டு வந்த அனைத்து திட்டங்களும் மீண்டும் கொண்டுவரப்படும் எனவே மக்கள் இனியாவது நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். இதனை அம்மாவின் 77 வது பிறந்தநாள் விழாவில் நாம் அனைவரும் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும். என இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்திற்கு நகர ஒன்றிய பேரூர் கழக வார்டு கழக முன்னாள் இந்நாள் நிர்வாகிகள் அமைச்சர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *