பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன்
பாபநாசத்தில் முதன்முறையாக வட்ட அளவிலான அல்குர்ஆன் ஓதும் போட்டி-மாணவர்களுக்கு நிகராக மாணவிகளும் பங்கேற்பு
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா திருப்பாலைத்துறையில் உள்ள ஆபீதின் மெட்ரிகுலேஷன் பள்ளியில் முதலாம் ஆண்டு வட்ட அளவிலான மாபெரும் அல்குர்ஆன் ஓதும் போட்டி நிர்வாக இயக்குனர் ஓஎஸ்ஜே காஜா முஹைதீன் தலைமையில் நடைபெற்றது.
இதில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவி மாணவிகள் அல்குர்ஆன் ஓதும் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில்
சாப்ஜான் , மௌலானா மௌலவி ஹாபிழ் காரி,நைனார் முஹம்மது யூசுபி,அப்துல் அலீம் இர்ஷாதி,இலியாஸ் மிஸ்பாஹி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர்.
இதில் மாணவ மாணவிகள் , பெற்றோர்கள் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.