மதுரை அழகர்கோவில் கள்ளழகர் சித்திரை திருவிழா கடந்த 8 ஆம் தேதி தொடங்கிய நிலையில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக 3-ம் நாள் நிகழ்வாக அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் தங்க பல்லக்கில் மது ரைக்கு புறப்பாடாகினார்.

4 ம் நாள் நிகழ்வாக கள்ளழகரை புதூர் மூன்று மாவடி, தல்லாகுளம் பகு தியில் பக்தர்கள் வரவேற் கும் எதிர்சேவை நடந்தது. அதைதொடர்ந்து கள்ளழகர் 5ம் நாள் நிகழ்வாக கடந்த 12- தேதி தங்கக்குதிரை வாகனத்தில் பச்சைபட்டு உடுத்தி வைகையாற்றில் எழுந்தருளினார்.

பின்னர் நேற்று முன்தினம் கள்ளழகர் தேனூர் மண்டபத்தில் எழுந்தருளி அங்கு மண்டூக முனிவருக்கு சாபவிமோச னம் அளித்த பின் இரவு முதல் காலை வரை ராமராயர் மண்டபத்தில் அழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய, விடிய நடந்தது.
இதனையடுத்து 7வது நாள் நிகழ்வாக அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க கோலத்துடன் கிளம்பிய கள்ளழகர் மதிச்சயம், ஆழ்வார்புரம், கோரிப்பாளையம், தல்லாகுளம் பகுதிகளில் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளினார்.

இதனையடுத்து ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளிய பின்னர் இரவு தல் லாகுளம் பகுதியில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் எழுந்தருளினார்.
திருமஞ்சனம் நடை பெற்ற பின்னர் கள்ளழகருக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் செய்யப் பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

சந்தனம், மஞ்சள், பால், தயிர், தேன், இளநீர், நவ தானியம், வாசனை திரவி யங்கள், பழங்கள் உள் ளிட்டவைகளைகொண்டு கள்ளழகருக்கு திருமஞ்சனம் பட்டது.
இதனை தொடர்ந்து மல்லிகைப்பூ, சம்மங்கி, கனகாம்பரம், ரோஜா, துளசி, கோழிக்கொண்டை பூ ஆகிய பூக்களை கொண்ட பூப்பல்லக்கில் கள்ளழகர் தல்லாகுளம் கருப்பண்ணசாமி கோவில் முன் எழுந்தருளினார்.

கருப்பண்ணசாமி கோவில் சார்பில் வழங்கப்பட்ட மாலையை அணிந்து கொண்ட கள்ளழகருக்கு தீபாராதனை காட்டப்பட்டது. பூப்பல்லக்கில் பின்னர் கள்ளர் திருக்கோலத்தில் கள்ளழகர் அழகர் மலையினை நோக்கி புறப்பட்டார்.
வழி நெடுக பக்தர்கள் திரண்டு வந்து அழகரை வழிஅனுப்பி வைத்தனர்.