சீர்காழி அருகே கொள்ளிடம் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் மாநில அளவில் நான்காம் இடமும் பெற்ற மாணவருக்கு பள்ளியின் சார்பாக பாராட்டு விழா.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடத்தில் அமைந்துள்ள தனியார் பள்ளி (சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி) மாணவன் தவசி மலை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 496 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடமும், மாநில அளவில் நான்காம் இடத்தையும் பெற்றுள்ளார்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவன் தவசி மலைக்கு பள்ளியின் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு மாணவனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பள்ளியின் சார்பாக மாணவனுக்கு சால்வை அணிவித்து வெற்றி கோப்பையை வழங்கி பாராட்டினர். இதேபோல் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளையும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.