திருவொற்றியூர்.
திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம், தி.மு.க., மண்டல குழு தலைவர் தனியரசு தலைமையில் நடந்தது. மண்டல உதவி கமிஷனர் விஜய் பாபு, செயற்பொ றியாளர் பாண்டியன், பாபு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், வார்டு 7 ல், கார்கில் வெற்றி நகரில், சென்னை துவக்கப்பள்ளிக்கு, ஒரு கோடி ரூபாய் செலவில் கூடுதல் கட்டடம், 1.65 கோடி ரூபாய் செலவில் கே.சி.பி., சாலையில் புதிய பூங்கா, 1.65 கோடி ரூபாய் செலவில், புதிய பல்நோக்கு கட்டடம், தியாகராய புரம், 2.5 கோடி ரூபாய் செலவில் சமுதாய நலக்கூடம் கட்டும் பணி உட்பட, 89 தீர்மானங்கள் நிறைவேறின. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் வார்டின் அடிப்படை வசதிகள் குறித்து, கவுன்சிலர்கள் பேசினர்