
காஞ்சிபுரத்தில் அதிமுக மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
200க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ஆட்டோ, பைக், சைக்கிள், தையல் இயந்திரம் உள்ளிட்ட ₹25 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சரும் அதிமுக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளருமான வி. சோமசுந்தரம் வழங்கினார்.
தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஏகாம்பரநாதர் கோயில் அருகில் நடைபெற்றது.
அதிமுக காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி.ஆர். மணிவண்ணன் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில், முன்னாள் அமைச்சரும் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக செயலாளருமான வி. சோமசுந்தரம் கலந்து கொண்டு 77 சைக்கிள்கள், 77 தையல் இயந்திரங்கள், இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, அரிசி மூட்டைகள், அத்தியாவசிய பொருட்கள், விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட ₹25 லட்சம் மதிப்பிலான உதவிகளை 200க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வழங்கினார்.