கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுகாதாரத்தின் ஐந்து முக்கிய செயல்பாடுகள் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.

கந்தர்வகோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுகாதாரத்தின் ஐந்து முக்கிய செயல்பாடுகளான பாதுகாக்கப்பட்ட குடிநீர் சுகாதார கழிப்பறை தன் சுத்தம் மற்றும் கை கழுவுதல் மாதவிடாய் சுகாதார மேலாண்மை ஊட்டச்சத்து உள்ளிட்ட தலைப்புகளில் கிராமலையா அமைப்பின் மூலம் விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.
தலைமையாசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார்.

கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார் .அறிவியல் ஆசிரியர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த அ.ரகமதுல்லா நீரின் பாதுகாப்பு குறித்தும் பேசினார். கிராமலையா அமைப்பின் வட்டார ஒருங்கிணைப்பாளர் பார்வதி சுகாதாரத்தின் ஐந்து முக்கிய செயல்பாடுகள் என்ற தலைப்பில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் குடிநீர் என்பது கிருமிகள் மற்றும் ரசாயனங்கள் இல்லாத குடிப்பதற்கும் சமைப்பதற்கும் ஏற்றதாகவும் தூய்மையானதாகவும் இருக்க வேண்டும்

பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி தனி நபர் வீட்டு குடிநீர் வசதி இணைபாகவோ அல்லது பொது குழாயாக இருக்கலாம். குடிநீரை பாதுகாப்பும் முறையில் கையாள வேண்டும் எனவும், சுகாதார கழிப்பறை மனித மலத்தினை பாதுகாப்பாக அகற்ற வேண்டும். நன்கு வடிவமைக்கப்பட்ட தொடர்ந்து பயன்படுத்தக்கூடிய பராமரிக்க கூடிய கழிப்பறையை சிறந்த கழிப்பறை ஆகும். அவ் வசதி மாற்றுத்திறனாளிகளுக்கும் பயன்படுத்தும் படி இருக்க வேண்டும்.

மனித மலக்கழிவு கழிப்பறையை பயன்படுத்துவதன் மூலம் பாதுகாப்பாக அகற்றப்படுகிறது எனவும், தன் சுத்தம் மற்றும் கை கழுவுதல் முக்கிய தருணங்களில் கைகளை சோப்பு போட்டு கழுவுதல் சாப்பிடுவதற்கு முன் மலம் கழித்த பிறகு கிருமித் தொற்றினை தவிர்க்க கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும், மாதவிடாய் சுகாதார மேலாண்மை பெண்களின் நல்வாழ்விற்கு பாதுகாப்பான மாதவிடாய் சுகாதார பழக்கவழக்கங்கள் மற்றும் அதற்கு தேவையான அணையாடைகள் ஆகியவற்றை பயன்படுத்துவதில் அவசியம் தெரிந்து வைத்திருத்தல் வேண்டும்.

குறிப்பாக வளரிளம் பெண்களுக்கு மாதவிடாய் சுகாதாரம் மிகவும் அவசியம் எனவும், ஊட்டச்சத்து என்ற தலைப்பில் சரிவிகித உணவு நல்ல உடல் வளர்ச்சிக்கும், நல்வாழ்வுக்கும் வழி வகுக்கும் ஊட்டச்சத்துள்ள உணவு நமது உடலுக்கு தேவையான சக்தி புரதச்சத்து வைட்டமின்கள், கொழுப்புச்சத்து, தாது உப்பு போன்றவற்றை தருவதுடன் நல்வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் செயல் திறனுக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உதவும் எனவும் மாணவ மாணவிகளுக்கு பயிற்சி வழங்கினார்.

முன்னதாக ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டிக்கு அந்த அமைப்பின் மூலம் லட்சம் மதிப்புள்ள தண்ணீர் தொட்டி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது அந்நிகழ்வில் செயல் திட்ட இயக்குநர் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்கள்.இந்நிகழ்வில் விராலிமலை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் இந்நிகழ்வில் ஆசிரியர்கள் சிந்தியா, ஜெம்ம ராகினி சகாய ஹில்டா, வெள்ளைச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share this to your Friends