அரியலூர்
அரியலூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு (TUJ) தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பில் மாநில தலைவர் டிஎஸ்ஆர் சுபாஷ் அவர்களின் அறிவுத்தலின்பேரில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அதன் தொடர்ச்சியாக அரியலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அடையாள கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் ஏபி வடிவேல் தலைமையில் நடைபெற்றது.

இதில் தாலுக்கா வாரியாக உள்ள நிருபர்களையும் நல வாரியத்தில் இணைத்து அவர்களுக்கும் அனைத்து சலுகைகள் வழங்கிடவும், மூத்த பத்திரிகையாளர்களுக்கு ஓய்வு ஊதிய திட்டம் அமல்படுத்திடவும், பத்திரிகையா ளருக்கு இலவச வீடு மனை பட்டா வழங்குதல், இலவச பஸ் பாஸ் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷமிட்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் செயலாளர் (சன் டிவி) ஞானசேகரன், பொருளாளர்(தினசெய்தி) பாலசுப்பிரமணியன்,. மக்கள் தொடர்பு அலுவலர் (வணக்கம் தமிழகம்) கார்த்திகேயன், (தின பூமி) பெர்னாட்ஷா,(உள்ளாட்சி சாரல்) காந்தி, (மக்கள் உள்ளாட்சி குரல்) சாமிநாதன், (எம்நாடு டிவி) பிரபாகரன், (தினமடை) பாபு, மற்றும் கலைமணி, வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share this to your Friends