தற்போது, நெல் அறுவடை பணிகள் துவங்கி உள்ளதால், இரும்புலி ஊராட்சியில், விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் வாயிலாக, அய்யப்பன் கோவில் அருகே, நெல் கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டுள்ளது.

அதில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய லஞ்சம் ஏதும் இன்றி விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் எனக் கோரி விவசாயிகள் விழிப்புணர்வு பதாகைகள் வைத்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி விவசாயி கூறியதாவது இரும்புலி ஊராட்சியில் ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் நெல் விவசாயம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 25 ஆயிரத்திற்கும் அதிகமான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது

அதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது.எனவே இந்த ஆண்டு விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய அதிகாரிகள் உள்ளிட்ட யாருக்கும் லஞ்சம் கொடுக்கத் தேவையில்லை.

அதனால் விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சமா? 94452 57000 – என்ற எண்ணில்புகார் கொடுக்கலாம், வாணிபக் கழக இயக்குனர் அதிரடி அறிவிப்பு, தற்காலிக பணியாளர்கள் மீது புகார்கள் எழுந்து உண்மை கண்டறியப்பட்டால் உடனுக்குடன் அவர்கள் பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவர் என விளம்பர பதாகையை நெல் கொள்முதல் நிலையம் செயல்படும் பகுதியில் வைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

Share this to your Friends