தென்காசி,
தென்காசியில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் பழைய ஓய்வூதிய திட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டம், சரண் விடுப்பு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், பதவி உயர்வினை பாதிக்கும் அரசாணை 243ரத்து, 21 மாத கால ஊதிய மாற்ற நிலுவைத் தொகை, தொகுப்பூதிய நியமன காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்துதல், காலிப்பணிடங்களை நிரப்புதல், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர், மக்கள் நலப் பணியாளர்கள், ஊராட்சி செயலர்கள் ஊர்ப்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், செவிலியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோர்க்கு கால முறை ஊதியம் வழங்குதல், சாலைப் பணியாளர்களின் 41 மாத கால பணி நீக்க காலத்தை முறைப்படுத்துதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட வேண்டி மாவட்ட தலைநகரங்களில் நடைபெறுவதாக இருந்த மறியல் போராட்டம் என்பது, மாற்றப்பட்டு ஆர்ப்பாட்டமாக நடத்திட முடிவு செய்யப்பட்டது.
அதன் படி தென்காசிபுதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் க.பிச்சைக்கனி, சு.கோபி, சண்முகசுந்தரம், முருகேஷ், S.ராஜேந்திரன், ஆரோக்கியராசு ஆகியோர் கூட்டாக தலைமை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் க.மாரிமுத்து, தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் மன்றம் மாவட்ட செயலாளர் த. கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் வே.வெங்கடேஷ் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அணைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில துணை தலைவர் பேராசிரியை ந.சங்கரி மாவட்ட தலைவர் .ஜாக்டீ மாரியப்பன், தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பி.கே. மாடசாமி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் பீ. ராஜசேகர், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில துணை தலைவர் வே.கலைச்செல்வி, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட துணை தலைவர் லட்சுமி காந்தம், தமிழ்நாடு மக்கள் நல பணியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் வே. புதியவன், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பிச்சுமணி, இந்திய தொழிற்சங்க மையமாவட்ட செயலாளர் மணிகண்டன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் சு,வேல்ராஜன் , தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்க நெல்லை மண்டல செயலாளர் த. சேகர், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க மாநில செயலாளர் சின்ராஜ். தமிழ்நாடு சமுக நலத்துறை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் இ.கார்த்திகேயன் தமிழ்நாடு நில அளவை ஒன்றிப்பு மாவட்ட தலைவர் க. பாலசுப்பிர மணியன் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் சீனிப் பாண்டி மாவட்ட பொருளாளர் இசக்கி துரை தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்க மாவட்ட செயலாளர் அன்ணாத்துரை தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராஜ் தமிழ்நாடு வேலைவாய்ப்புத் துறை ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் க. மார்த்தாண்ட பூபதி, தமிழ்நாடு மேல்நிலை பள்ளி கணிணி ஆசிரியர் சங்க மாநில தலைவர் செல்வகுமார், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் ஐயப்பன், தமிழ்நாடு உதவி வேளான்மை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பா. சண்முகம், தமிழ்நாடு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தின் மாநில துணை தலைவர் முருகையா, நேரடி நியமனம் பெற்ற முதுநிலை ஆசிரியர்கள் சங்கம் ஜெயக்குமார், தமிழ்நாடு அரசு ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் கிருபாசம்பத் இந்திய முறை மருந்தாளுநர் சங்க மாநில தலைவர் மோகன்ராஜ் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் பாபுராஜ் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயலாளர் பி. ராஜ்குமார், கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார் நிறைவாக ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர் க.துரைசிங் கோரிக்கைகள் மற்றும் அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்து விரிவாகவும் விளக்கமாகவும் நிறைவுரை ஆற்றினார். முடிவில் ஜாக்டோ – ஜியோ மாவட்ட நிதி காப்பாளர் அ.பி.சதீஷ்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 1800க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.