அலங்காநல்லூர்.
மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்த நாளையொட்டி பேருந்து நிலைய பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் கோடீஸ்வரன், கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாண்டி, நகரச் செயலாளர்கள் ராஜபிரபு, முருகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பண்ணைகுடி பிச்சை வர்த்தக அணி ஒன்றிய செயலாளர்
சுதந்திரபாண்டியன், அவைத் தலைவர் வீராச்சாமி, பாலமேடு நகர பொறுப்பாளர் முருகேசன், அம்மா பேரவை பொதுச் செயலாளர் மாணிக்கம், உள்பட ஒன்றிய நகர வார்டு மற்றும் கிளைக் கழக ,செயலாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் வீரப்பிரகாஷ் நன்றி கூறினார்.