ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் பிறந்தநாள் விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், லியானா குரூப்ஸ் சார்பிலும் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் தமிழக முன்னாள் முதலமைச்சரும், நடிகையுமான ஜெயலலிதா அவர்கள் பிறந்த நாள் விழா மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

விழாவில் நடிகர் அப்பா பாலாஜி, நடிகர் மீசை தங்கராஜ், எழுத்தாளர் விவேக் ரா‌ஜ், மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா, குழந்தை நட்சத்திரம் லியானா மற்றும் நடிகர்கள், நடிகைகள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் சிற்றுண்டியும், தேநீரும், இனிப்புகள் வழங்கப்பட்டது. ஏழை, எளியவர்களுக்கு 51 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

Share this to your Friends