செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியானது 1949ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.இப்பள்ளியில் 75வது ஆண்டு விழா பவள விழாவாக 21.02.2025ல் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் பள்ளியின் முன்னாள் மாணவரும் சுற்றுசூழல் விஞ்ஞானியுமான முனைவர் திரு.அப்துல் ரகுமான் தலைமையில் நடைபெற்றது .பள்ளியின் தலைமையாசிரியர் திரு.மா.த விஜயகுமார் முன்னிலை வகித்தார்.

உதவி தலைமை ஆசிரியர் திருமதி.பரமேஸ்வரி ஆண்டு அறிக்கை வாசித்தார்.உதவி தலைமை ஆசிரியர் ஜெயமுருகன் வரவேற்புரை வாசிக்க, உதவி தலைமை ஆசிரியர் முனியாண்டி நன்றியுரையாற்றினார்.

இவ்விழாவில் அச்சிறுபாக்கம் பேரூராட்சி தலைவி திருமதி நந்தினிகரிகாலன் ,துணைத்தலைவர் விடிஆர் எழிலரசன் கவுன்சிலர் சுரேஷ் அகிலா செல்வம் பாஸ்கர்,பள்ளி மேலாண்மை குழு தலைவி திருமதி வடிவுக்கரசி, உறுப்பினர்கள் ஆனந்தன்,ராஜா, ராஜகோபால் கணேசன் மன்னாதன்,

பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு.சித்தார்த்தன் ,திரு.ரபி முகமது முன்னாள் தலைமை ஆசிரியர்கள் முன்னாள் ஆசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் பெற்றோர்கள் இன்னாள் மாணவர்கள் என 1100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.1968ஆம் ஆண்டு முன்னாள் மாணவர் திரு T R ராமச்சந்திரன் அவர்கள் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கினார்.

2024ஆம் ஆண்டில் பள்ளிக்கு பல்வேறு விதமான உதவிகள் செய்த முன்னாள் மாணவர்கள் திரு.அப்துல் ரஹ்மான்(1956) சுற்றுசூழல் விஞ்ஞானி திரு T R ராமச்சந்திரன் (1968) TRR TRACTORS திரு V.விஸ்வநாதன் (1968)TRR TRACTORS மனேஜர் திரு.N.சுப்ரமணியன் (1975) CEO ITEK ENGINEERS CHENNAI திரு.தமிழ்வேந்தன்(1980) CIVIL ENGINER திரு .மகாதேவன் (1982) REAL ESTATE செல்வி.வரலட்சுமி(1987) SUPT SENDIVAKKAM திரு.பாலமணிகண்டன்(1995) ,ASST EXECUTIVE ENGINER GUINDY சிறந்த முன்னாள் மாணவர்களாக கௌரவிக்கப்பட்டனர்.

இவ்விழாவில் இப்பள்ளியில் பணியாற்றிய முன்னாள் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்களை கௌரவித்தனர்.மூத்த முன்னாள் மாணவர்கள் 1949 முதல்1980 வரை பள்ளியில் படித்தவர்கள் கௌரவிக்கப்பட்டனர் .இவ்விழாவிற்கு முன்னாள் மாணவர்கள் சார்பாக ஒருங்கிணைத்த திரு.ஜானகிராமன் (1975) திரு.ஜெயந்தன்(1997)மற்றும் பள்ளியில் பணிபுரியும் முன்னாள் மாணவர்கள் திரு.தணிகைவேல்(1995) திரு.ரங்கநாதன்(2003) திருமதி.மீனா(1987),திருமதி.புனிதவதி,திரு.திருமலை,திரு.ஆனந்தன் அவர்களுக்கு
நன்றி தெரிவிக்கப்பட்டது .ஆரம்ப நாட்களில் பள்ளி துவங்க உதவிய முன்னாள் கட்டிட குழு தலைவர் தெய்வதிரு ஆனந்தமல் ஜெயின் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இவ்விழாவில் முன்னாள் மாணவர்கள் நடத்தும் சுசிலா- நடராஜன் அறக்கட்டளை மூலம் தந்தையை இழந்த மூன்று மாணவர்களின் குடும்பத்திற்கு தையல் மிஷினை அறக்கட்டளை சார்பாக திரு கருணாநிதி, திரு சுப்ரமணியன் வழங்கினர். 75ஆம் ஆண்டில் 75 ஆம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் 75 மரக்கன்றுகளை பள்ளிக்கு வழங்கினர்.பள்ளியின் பவள விழாவில் சிறுநீரை உரமாக்கும் கழிப்பறை திட்டம் முன்னாள் மாணவர் மற்றும் சுற்றுச்சூழல் விஞ்ஞானி திரு அப்துல் ரஹ்மான் அவர்களின் சொந்த செலவில் கட்டி தருவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் பவள விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.அனைத்து முன்னாள் மாணவர்களும் இணைந்து சிறப்பாக விழாவை நடத்திய பள்ளியின் தலைமையாசிரியர் திரு.மா.த விஜயகுமார் அவர்களை கௌரவித்தனர்.மாணவர்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மூலம் தங்கள் தனித்திறமையை வெளிப்படுத்தினர்.முதல் இரண்டு மதிப்பெண் பெற்ற மாணவர்கள்,100சதவீத வருகை புரிந்த மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Share this to your Friends