தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர் மாவட்ட அருங்காட்சியகத்தில் கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் கும்பகோணம் அரசு கவின்கலைக்கல்லூரி நடத்தும் ஓவிய சிற்ப கலை கண்காட்சி நிறைவு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் அவர்கள்தலைமையில் இன்று காலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசும் போது:- தஞ்சாவூர் மாவட்டம் கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் கும்பகோணம் அரசு கவின்கலைக்கல்லூரி நடத்தும் ஓவிய சிற்ப கலை கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் கும்பகோணம் அரசு கவின்கலைக் கல்லூரியில் பயிலும் வண்ணக்கலைத்துறை, காட்சிவழித் தகவல் வடிவமைப்பு துறை மற்றும் சிற்பக்கலைத்துறை ஆகிய மூன்று துறைகளில் பயிலும் மாணவர்களுடைய கலை படைப்புகளில் ஆயில் கலர், அக்ரலிக் கலர் மற்றும் நீர் வண்ணம் மரச்சிற்பங்கள், சுடுமண்சிற்பங்கள்.
உலோக சிற்பங்கள் விழிப்புணர்வு போஸ்டர்கள், புகைப்படங்கள். கணினி ஓவியங்கள் ஆகியன காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கும்பகோணத்தில் அரசு கவின்கலை கல்லூரி இயங்கி வருவது தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு கலைகளுக்கு சிறப்பு வாய்ந்த இடமாக திகழ்கிறது.
இக்கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் தங்களுடைய கலை திறன் மூலமாக அதன் சிறப்புகள் உலகறிய செய்ய ஒவ்வொருவரும் உலகம் போற்றும் ஓவியராக, சிற்பியாக, ஒளிப்பதிவாளராக மாற வேண்டுமென வாழ்த்துக்கள் தெரிவித்த அவர் உங்கள் படைப்புத்திறனை கொண்டு அரசு திட்டங்களுக்கு உதவ வேண்டும். மேலும், எதிர்வரும் 12, 13 மற்றும் 14 ஏப்ரல் 2025 ஆகிய தேதிகளில் தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் நடைபெறும் ஓவிய சந்தை நிகழ்ச்சியில் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்கள்.
இக்கண்காட்சியில் சிறந்து விளங்கிய கலை படைப்புகளுக்கு ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. அரசு கவின் கலை கல்லூரி முதல்வர் ப.ரா.ரவி முதுநிலை விரிவுரையாளர் வா.சித. அருளரசன் மற்றும் பலர் கலந்து கொண்ட நிகழ்ச்சியை பொறியாளர் முத்துக்குமார் ஏற்ப்பாடு செய்திருந்தார்.